முன்னாள் எம்பி எச்.எம்.எம் ஹரீஸ்-ரவூப் ஹக்கீம் எம்.பி சந்திப்பு
25 ஆவது நோன்பை நோற்பதற்கான சஹர் உணவை உட்கொள்ளும் சந்தர்ப்பம் ஒன்றில் முன்னாள் எம்பி எச்.எம்.எம் ஹரீஸ் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் ஆகியோர் சந்தித்துக் கொண்டனர்.
குறித்த சந்திப்பு இன்று(15) அதிகாலை அம்பாறை மாவட்டம் மருதமுனை அக்பர் வீதியில் உள்ள முன்னாள் கல்முனை மாநகர சபை உறுப்பினர் எம் .எஸ். எம் .ஹாரிஸ்( நவாஸ்)ஐனுல் முன்ஸிலா ஆகியோரின் சிறப்பான ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்வில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
கடந்த காலங்களில் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைவருடன் ஏற்பட்ட பிணக்கு காரணமாக முன்னாள் எம்பி எச்.எம்.எம் ஹரீஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்நிகழ்வில் இருவரும் ஒன்றாக இணைந்து சஹான் உணவினை உட்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
