;
Athirady Tamil News

பாகிஸ்தான் ராணுவம் மீது ஆப்கானிஸ்தான் பதிலடி தாக்குதல்; 14 வீரர்கள் பலி

0

காபூல்

ஆப்கானிஸ்தான் மீது கடந்த பிப்ரவரி 26-ந்தேதி முதல் பாகிஸ்தான் தாக்குதலை நடத்தி வருகிறது. இந்த எல்லை கடந்த வன்முறையில், ஆப்கானிஸ்தானில், இதுவரை 75 பேர் பலியாகி உள்ளனர். 193 பேர் காயமடைந்து உள்ளனர் என ஐ.நா. தகவல் தெரிவிக்கின்றது.

அவர்களில் பலர் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆவர். இந்நிலையில், ஆப்கானிஸ்தானின் காபூல் நகரில், பாகிஸ்தான் ராணுவம் நேற்றிரவு வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில், பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்பட 4 பேர் பலியானார்கள். 14 பேர் காயமடைந்தனர். இதனை ஆப்கானிஸ்தானுக்கான ஐ.நா. உதவி மையம் தெரிவித்து உள்ளது.

இதனை தொடர்ந்து, ஆப்கானிஸ்தானின் பாதுகாப்பு அமைச்சகம் சார்பில் நேற்று வெளியிடப்பட்ட செய்தியில், பாகிஸ்தான் தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில், குனார் மற்றும் நங்கர்ஹார் மாகாணங்களின் கிழக்கு பகுதியில் ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதலில் பாகிஸ்தானை சேர்ந்த 14 வீரர்கள் பலியாகி உள்ளனர் என தெரிவித்து உள்ளது. இதுதவிர 11 பேர் காயமடைந்தனர். பீரங்கி மற்றும் சர்வதேச வாகனம் ஒன்றும் தாக்கி அழிக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.