;
Athirady Tamil News

2025ஆம் ஆண்டு உயர்தர பரீட்சை ; 8300 பரீட்சாத்திகள் 3 A சித்தி; 30, 898 பேர் எந்தவொரு பாடத்திலும் சித்தி பெறவில்லை !

0

நேற்று நள்ளிரவு வெளியான 2025ஆம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின்படி, 8,300 பரீட்சாத்திகள் 3 ‘A’ சித்தியை பெற்றுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.

அதன்படி, இவர்களில் 7,477 பாடசாலை பரீட்சாத்திகளும், 823 தனிப்பட்ட பரீட்சாத்திகளும் அடங்குகின்றதாகவும் தெரிவிக்கபப்டுகின்றது.

அதேவேளை 30, 898 பரீட்சாத்திகள் எந்தவொரு பாடத்திலும் சித்தி பெறவில்லை என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

மேலும் 2025 ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் (A/L) பங்கேற்ற மொத்த பரீட்சார்த்திகளில் 62.64 சதவீதம் பேர் பல்கலைக்கழக சேர்க்கைக்குத் தகுதி பெற்றுள்ளனர் என இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

2025 ஆம் ஆண்sßsடுsr A/L தேர்வு முடிவுகள் நேற்று (31) இணையத்தில் வெளியிடப்பட்டன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.