;
Athirady Tamil News

விரைவில் வெளியேறுவோம்; ஈரான் போருக்கு 2, 3 வாரங்களில் தீர்வு! – டிரம்ப்

0

ஈரானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கை இன்னும் 2 அல்லது 3 வாரங்களில் முடிவுக்கு வரும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

மத்திய கிழக்கில் ஒரு மாதத்துக்கும் மேலாக நடந்து வரும் போரை முடிவுக்குக் கொண்டு வரும் விதமாக ஈரானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகள் இரண்டு முதல் மூன்று வாரங்களுக்குள் முடிவுக்கு வரும் என்றும், அமெரிக்க ராணுவத்தினர் ஈரானை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து விரைவில் வெளியேறுவார்கள் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் டிரம்ப், “நாங்கள் விரைவில் வெளியேறுவோம். இன்னும் இரண்டு வாரங்கள், இரண்டு அல்லது மூன்று வாரங்கள்கூட ஆகலாம்.

ஈரானுடன் ஒப்பந்தம் செய்ய வேண்டிய அவசியமில்லை எங்களுக்கு இல்லை. ஈரான் தனது அணுஆயுதங்களை இழந்த பின்னரே இந்தப் போர் முடிவுக்கு வரும். நாங்கள் அதன்பின்னர் வெளியேறுவோம்” என்றும் தெரிவித்தார்.

அணுஆயுதக் கொள்கையைக் கைவிடக் கோரி, ஜெனீவாவில் நடைபெற்ற ஈரான் – அமெரிக்கா இடையேயான பேச்சுவார்த்தை முடிவுக்கு வராத நிலையில், கடந்த பிப். 28 ஆம் தேதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ராணுவங்கள் ஈரானின் தலைநகர் தெஹ்ரான் மீது நடத்திய கூட்டுத் தாக்குதலில் உச்சத்தலைவரும், ஈரானின் மதகுருவுமான அலி அயத்துல்லா கமேனி, அவரது குடும்பத்தினர், ராணுவ உயரதிகாரிகள் 50 பேர் கொல்லப்பட்டனர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமெரிக்காவுக்கும், இஸ்ரேலுக்கு ஆதரவளுக்கும் வளைகுடா நாடுகள் மீதும், இஸ்ரேல் மீது ஈரான் ராணுவத்தினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

அதனொரு பகுதியாக உலக வர்த்தகத்தில் மிகவும் முக்கிய கடல்வழிப் பாதையான ஈரானுக்கு அருகில் உள்ள ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மூடியதால், பலவேறு நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வருகிறது.

5-வது வாரமாக போர் தொடர்ந்து வரும் நிலையில், ஹோர்முஸ் நீரிணையைத் திறக்காவிட்டால் கடும் தாக்குதல் நடத்தப்படும் என ஈரானுக்கு அமெரிக்கா மிரட்டல் விடுத்தது.

உலகளவில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தடுப்பாடுக்கு மத்தியில், போரை முடிவுக்குக் கொண்டுவர டிரம்ப் சூசகமாக பேசியிருப்பது பலருக்கும் நம்பிக்கை ஏற்படுத்தியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.