;
Athirady Tamil News

இலங்கைக்கு வரவுள்ள பெருந்தொகை எரிபொருள் ; வெளியான அறிவிப்பு

0

இன்று ஏப்ரல் 13 ஆம் திகதி சுத்திகரிக்கப்பட்ட எரிபொருள் சரக்குகள் இலங்கைக்கு வந்து சேரும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஜனக ராஜகருண தெரிவித்துள்ளார்.

சுத்திகரிக்கப்பட்ட எரிபொருள்
நாட்டில் போதுமான எரிபொருள் கையிருப்பு எவ்வித பற்றாக்குறையுமின்றி பராமரிக்கப்படுவதாகவும், கோரப்பட்ட சரக்குகள் திட்டமிட்டபடி வந்து சேரும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அத்தோடு, 30,000 மெட்ரிக் டன் உலை எண்ணெய் சரக்கு ஏப்ரல் 13 ஆம் திகதி வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதற்கிடையில், நேற்று நள்ளிரவு முதல் ஏப்ரல் 18 வரை, பெற்றோலில் இயங்கும் வாகனங்களுக்கு கியூஆர் குறியீடு (QR code) இன்றி எரிபொருள் வழங்கப்படும் என்று பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், தற்போதுள்ள ஒற்றை-இரட்டை எரிபொருள் விநியோக முறையில் எந்த மாற்றமும் இருக்காது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.