;
Athirady Tamil News

திருகோணமலையில் கோர விபத்தில் சிக்கிய பேருந்து ; 20 பேர் படுகாயம்

0

மூதூர் நோக்கிப் பயணித்த பேருந்து ஒன்று கிண்ணியா பகுதியில் விபத்துக்குள்ளானதில் 23க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் மூதூர் மற்றும் திருகோணமலை வைத்தியசாலைகளில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் நால்வரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த பேருந்து வீதியை விட்டு விலகி மரம் ஒன்றில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இச்சம்பவம் குறித்து கிண்ணியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.