பெண் கொடூரமாக சித்திரவதை; வீடொன்றில் பொலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!
பலாங்கொடை – பல்லேவெல பகுதியில் உள்ள வீடொன்றில் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
நேற்று (23) பிற்பகல் குறித்த சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. குறித்த வீட்டில் தனியாக இருந்த பெண் கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிடைக்கப்பெற்ற தகவலின்பேரில் நடத்தப்பட்ட விசாரணைக்குப் பின்னர் இந்த சடலம் கண்டெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. சந்தேக நபரை தேடுவதற்காக இரத்தினபுரி பொலிஸ் நிலைய மோப்ப நாய் பயன்படுத்தபட்டுள்ளது.
பிரேத பரிசோதனை இன்று (24) பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் சம்பவம் தொடர்பில் பின்னவல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.