;
Athirady Tamil News

சற்று முன்னர் நேருக்கு நேர் மோதிய இரண்டு பேருந்துகள் ; கோர விபத்தில் பலர் படுகாயம்

0

தம்புள்ளை – மாத்தளை பிரதான வீதியின் நாவுல, நாலந்த பகுதியில் இரண்டு பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி பாரிய விபத்துக்குள்ளாகியுள்ளன.

இன்று (26) காலை 9.20 மணியளவில் தனியார் பேருந்து ஒன்றும், இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்து ஒன்றும் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.

சாரதி கைது
விபத்தில் காயமடைந்த 11 பேர் நாலந்த பிரதேச வைத்தியசாலை மற்றும் மாத்தளை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் ஒருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பாகத் தனியார் பேருந்தின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இலங்கை போக்குவரத்துச் சபைப் பேருந்தின் சாரதி தப்பியோடியுள்ளார்.

விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை நாவுல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.