;
Athirady Tamil News

நிதி அமைச்சின் செயலாளர் இல்லத்தை முற்றுகையிட சென்றவர்களுக்கு சாணத்தால் தாக்கி விரட்டிய பொது மக்கள்

0

நிதி அமைச்சின் செயலாளர் ஹர்ஷனா சூரியப்பெருமவின் பெலவத்த, அக்குரேகொடவில் உள்ள இல்லத்திற்கு முன்பாகப் போராட்டம் நடத்தச் சென்ற புதிய மக்கள் முன்னணித் தலைவர் சுகீஸ்வர பண்டார உள்ளிட்ட குழுவினர் கடும் எதிர்ப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

போராட்டம் நடத்த சென்றவர்கள் மீது பொது மக்களால் முட்டைகள் மற்றும் சாணத்தால் தாக்குதல் நடத்தப்பட்டதுடன் கூடியிருந்த பொதுமக்கள் கூச்சலிட்டு எதிர்ப்பை வெளிப்படுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதற்றமான சூழல்
இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து சம்பவ இடத்தில் பதற்றமான சூழல் நிலவியுள்ளது.

குறித்த சம்பவத்தின் பின்னர் பொலிஸார் தலையிட்டு நிலைமையைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களின் கடும் எதிர்ப்பின் பின்னர் போராட்டகாரர்கள் கலைந்து சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.