;
Athirady Tamil News

யாழில் ஒன்லைன் விளையாட்டால் 19 வயது மாணவன் செய்த செயல் ; மனதை உலுக்கும் குடும்ப பின்னணி

0

யாழில் மாணவர் ஒருவர் நேற்று புதன்கிழமை (29) தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்த சம்பவமானது பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

தெல்லிப்பழை – வீமன்காமம் பகுதியை சேர்ந்த 19 வயதுடைய மாணவனே இவ்வாறு உயிர்மாய்த்துள்ளார்.

மரண விசாரணை
இது குறித்து மேலும் தெரிவிக்கையில், குறித்த மாணவன் கொக்குவில் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கணிதப் பிரிவில் கல்வி கற்று வருகிறார்.

குறித்த மாணவன் தவிர்ந்த அவரது வீட்டில் உள்ள அனைவரும் விசேட தேவையுடையவர்களாகவே காணப்படுகின்றனர்.

இவ்வாறான சூழ்நிலையில் குறித்த மாணவன் தொலைபேசி கேமிற்கு அடிமையான நிலையில் இன்று அதிகாலை தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார்.

அவர் உயிர்மாய்க்கும்போது வித்தியாசமான முறையில் ஆடை அணிந்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த மாணவனின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி மேற்கொண்டார்.

மாணவனின் மரணம் அனைவரையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.