;
Athirady Tamil News

மே 9 போர் நிறுத்த அறிவிப்பு!

0

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் ஆகியோர் நேற்று (29) தொலைபேசி வாயிலாகத் தீவிரப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

இதன் போது, உக்ரைன் போரில் ஒரு “சிறிய போர் நிறுத்தத்தை” மேற்கொள்ளுமாறு புதினிடம் டிரம்ப் கோரிக்கை விடுத்துள்ளார். வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், “நாங்கள் ஒரு நல்ல உரையாடலை நடத்தினோம்.

உக்ரைனில் தற்காலிகப் போர் நிறுத்தம் செய்ய நான் பரிந்துரைத்தேன், அவர் அதைச் செய்வார் என்று நினைக்கிறேன் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

மே 9ல் நடைபெறும் ரஷ்யாவின் இரண்டாம் உலகப்போர் வெற்றி தினக் கொண்டாட்டத்தின்போது போர்நிறுத்தம் அறிவிப்பதாக புதின் உறுதி என தகவல் வெளியாகியுள்ளது.

ஈரானின் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை அகற்றுவதற்கு உதவத் தயார் என புதின் கூறிய நிலையில், அதைவிட உக்ரைன் போர்நிறுத்தத்துக்கு கவனம் செலுத்த டிரம்ப் கேட்டுக்கொண்டதாகவும் கூறப்படுகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.