;
Athirady Tamil News

மஹிந்த ராஜபக்ஷவுக்கு அழைப்பாணை

0

ஏயார்பஸ் வானூர்தி கொள்முதல் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைக்கு , முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் அமைச்சர் பியங்கர ஜெயரத்ன ஆகியோருக்கு வாக்குமூலம் வழங்குமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பியங்கர ஜெயரத்ன மே 12 ஆம் திகதி கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விசாரணை, ஏயார்பஸ் வானூர்தி கொள்முதல் செயல்முறையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பாக மேற்கொள்ளப்படுகின்றது.

மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்தும் நடைபெற்று வருவதாகவும், தேவையான சட்ட நடவடிக்கைகள் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.