;
Athirady Tamil News

பாலியல் துஷ்பிரயோகம் குற்றச்சாட்டில் தேரர் கைது ; நீதி மன்றம் பிறப்பித்த உத்தரவு

0

சிறுமி ஒருவர் கடத்தப்பட்டு பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளானதாக கூறப்படும் வழக்கில் கைது செய்யப்பட்ட வண. பல்லேகம ஹேமரத்ன தேரரை மே 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு கோட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கொண்டிருந்த நிலையில், நேற்று முன்தினம் (மே 8) இரவு ஹேமரத்ன தேரர் கைது செய்யப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து இன்று (மே 9) அவர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், மே 12 வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

முன்னதாக, 15 வயது சிறுமி ஒருவர் கடத்தப்பட்டு தடுத்து வைக்கப்பட்டதாக நிட்டம்புவ பொலிஸில் 2026 மார்ச் 6 ஆம் திகதி புகார் அளிக்கப்பட்டிருந்தது.

அதன் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன. விசாரணைகளின் போது, பாதிக்கப்பட்ட சிறுமி முந்தைய பாலியல் துஷ்பிரயோக சம்பவம் தொடர்பாகவும் தகவல் வழங்கியதை அடுத்து, நிட்டம்புவ பொலிஸார் மற்றும் பெண்கள், சிறுவர் பிரிவு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்தனர்.

அதன் தொடர்ச்சியாக, அனுராதபுரம் பிரதான நீதவான் நீதிமன்றம் வண. ஹேமரத்ன தேரரை கைது செய்ய உத்தரவிட்டதுடன், வெளிநாட்டு பயணத் தடைவும் விதித்திருந்தது.

மேலும் விசாரணைகளின் போது, இந்த வழக்கில் வண ஹேமரத்ன தேரரும் சிறுமியின் தாயாரும் சந்தேகநபர்களாக பெயரிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.