;
Athirady Tamil News

டெங்கு பரவல் குறித்து சுகாதார அமைச்சு எச்சரிக்கை!

0

இலங்கையில் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ள நிலையில், நாடு முழுவதும் 42 அதி-அபாய வலயங்களை சுகாதார அமைச்சு அடையாளம் கண்டுள்ளது.

தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் தரவுகளின்படி, இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் 27,465 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், 14 மரணங்களும் சம்பவித்துள்ளன.

தற்போதைய தரவுகளின் அடிப்படையில், மேல் மாகாணத்திலேயே அதிகளவிலான நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

குறிப்பாக கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களில் பாதிப்பு அதிகமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்த பதில் பணிப்பாளர் வைத்தியர் கபில கண்ணங்கர, நாட்டில் தற்போது நிலவும் தொடர்ச்சியான மழைக்கால வானிலை காரணமாக டெங்கு பரவல் மேலும் அதிகரிக்கக்கூடும் என எச்சரித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.