;
Athirady Tamil News

பிறப்பு, இறப்பு மற்றும் விவாகப் பதிவாளர்கள் நியமனம்

0
ஊர்காவற்றுறை, எழுதுமட்டுவாழ், கரவெட்டி, கோப்பாய் மற்றும் வட்டுக்கோட்டை பிரதேசத்திற்கான பிறப்பு இறப்பு மற்றும் விவாகப் பதிவாளர்களாக தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு பதிவாளர் நாயகத்தினால் வழங்கப்பட்டநியமனக் கடிதங்கள் இன்றைய தினம் (21.05.2026) யாழ் மாவட்ட அரசாங்க அதிபர்  மருதலிங்கம் பிரதீபன் அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.
அந்தவகையில் ஊர்காவற்றுறை பிரதேசத்தின் பிறப்பு, இறப்பு மற்றும் தீவுப்பகுதிக்கு விவாகப்பதிவாளராக ஜிந்துஜா சசிகுமார்  , எழுதுமட்டுவாழ் பிரதேசத்தின் பிறப்பு, இறப்பு மற்றும் தென்மராட்சி விவாகப்பதிவாளராக காயத்திரி செந்தூரன், கோப்பாய் பிரதேசத்தின் பிறப்பு, இறப்பு மற்றும் வலிகாமம் கிழக்கு விவாகப்பதிவாளராக   தாட்சாயினி சந்திரலிங்கம்  , வட்டுக்கோட்டை பிரதேசத்தின் பிறப்பு, இறப்பு மற்றும் வலிகாமம் மேற்கு விவாகப்பதிவாளராக  ஜீவராஜினி ரமணன், கரவெட்டி பிரதேசத்தின் மேலதிக விவாகப்பதிவாளராக (பொது)  தர்சிகா கஜதாசன் நியமனக் கடிதங்களே அரசாங்க அதிபரால் வழங்கப்பட்டதுடன், நியமனம் பெற்றவர்களுடன் அவர்களின் கடமைகள் தொடர்பாக கலந்துரையாடியதுடன் தமது வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டார்.

இந் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் கே. சிவகரன், வடக்கு வலய உதவிப் பதிவாளர் நாயகம் P. தாரகா, காணி மாவட்ட பதிவாளர்  எஸ். குணாஜினிஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.