திருப்பி விடப்பட்டது பண்டாரநாயக்க வரவிருந்த விமானங்கள்
கனமழை காரணமாக கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வரவிருந்த குறைந்தது ஏழு விமானங்கள் இதுவரை வேறு திசைகளுக்கு திருப்பி விடப்பட்டுள்ளதாக சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை அறிவித்துள்ளது.
குறித்த விமானங்களில் 5 விமானங்கள் மத்தள விமான நிலையத்திற்கும், 2 விமானங்கள் இந்தியாவின் கொச்சின் விமான நிலையத்திற்கும் திருப்பி விடப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.