;
Athirady Tamil News

சீரற்ற காலநிலை; ஒருவர் பலி; 7 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு

0

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால், இரத்தினபுரி, கம்பஹா, களுத்துறை மற்றும் காலி மாவட்டங்களில் உள்ள 1,966 குடும்பங்களைச் சேர்ந்த 7,757 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகைமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

இன்று காலை (23) முடிவடைந்த 24 மணி நேரத்தில், கம்பஹா மாவட்டத்தின் அலவல பகுதியில் அதிகபட்சமாக 137.8 மில்லிமீற்றர் மழை பதிவாகியுள்ளது.

சீரற்ற காலநிலையால் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் அனர்த்த முகைமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்ட , 58 குடும்பங்களைச் சேர்ந்த 201 பேர் 6 பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும், இரத்தினபுரி மாவட்டத்தின் எஹெலியகொடவில் 117.4 மில்லிமீற்றர் மழை பெய்துள்ளதாகவும் அனர்த்த முகைமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.