குறிகாட்டுவானில் மூழ்கிய கடற்பாதையை மீட்க கடற்படையினருக்கு 17 மில்லியன்
நயினாதீவு இறங்குதுறையில் கடல் நீரில் தாழ்ந்து காணப்பட்ட வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான கடல் “பாதையை” கரைக்கு கொண்டுவரும் நடவடிக்கை கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு வேலணை பிரதேச செயலகத்தில், குறிகட்டுவான் இறங்குதுறை புனரமைப்பு தொடர்பாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர மேம்பாட்டு அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில், நயினாதீவு படகு உரிமையாளர்கள் சங்கம் முன்வைத்த கோரிக்கைகளின் அடிப்படையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கடலில் தாழ்ந்து காணப்பட்ட இந்தப் படகு காரணமாக அப்பகுதியில் படகுகளை நிறுத்துவது மற்றைய படகோட்டிகளுக்கு நீண்டகாலமாக சிரமமாக இருந்து வந்தது.
மேலும், எதிர்காலத்தில் வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் இயக்கப்படவுள்ள புதிய கடற்பாதையை பாதுகாப்பாக நிறுத்தி வைப்பதற்கும் இந்த நடவடிக்கை அவசியமாக இருந்தது.
கடற்பாதையை அகற்ற கடற்படையினருக்கு வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் 17 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
