;
Athirady Tamil News

யாழில் பதின்ம வயதான பாடசாலை மாணவி கர்ப்பம்: சகோதரன் உள்ளிட்ட இருவர் கைது!

0

யாழில் 15 வயதான பாடசாலை மாணவியொருவர் ஏழரை மாத கர்ப்பிணியான சம்பவத்தில் சகோதரன் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.

இந்த சம்பவம் இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பண்டத்தரிப்பு, பனிப்புலம் பகுதியில் நடந்தது. பாடசாலை மாணவியான 15 வயது சிறுமி, வயிற்று வலி இருப்பதாக தாயாரிடம் கூறியதையடுத்து, வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது மாணவி ஏழரை மாத கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது.

17, 20 வயதான இருவர் கைது
சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த தாயார் மாணவியை உடனடியாக இளவாலை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றார். பொலிசார் மாணவியை கைது செய்து, வைத்திய பரிசோதனையின் பின் விசாரணை நடத்தினர்.

இதன்போது தனது தாயாரின் சகோதரியின் மகனான- ஒன்றுவிட்ட சகோதரன்- ஒருவரும், மற்றொரு நபரும் தன்னை வெவ்வேறு சந்தர்ப்பங்களில் பாலியல் வல் லுறவுக்குள்ளாக்கியதாக மாணவி தெரிவித்தார்.

மாணவி வழங்கிய தகவலுக்கமைய 17, 20 வயதான இருவர் கைது செய்யப்பட்டு மீலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தற்போது உரிய மருத்துவப் பராமரிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. இச்சம்பவம் குறித்துப் பொலிஸார் தெரிவிக்கையில், “பாதிக்கப்பட்ட சிறுமி குழந்தை பிரசவித்த பின்னர், பிறக்கும் குழந்தைக்கு டி.என்.ஏ. (DNA) பரிசோதனை செய்யப்படும்.

அந்த அறிவியல் பூர்வ அறிக்கையின் அடிப்படையில் குற்றவாளிகளுக்குக் கடுமையான மேலதிக சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படு எனத் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் யாழ். குடாநாட்டில் பெரும் பரபரப்பையும், பெற்றோரிடையே பெரும் அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.