;
Athirady Tamil News

தையிட்டி விகாரை பகுதியை புகைப்படம் எடுத்த வடமராட்சி இளைஞர்கள் கைது

0

தையிட்டி விகாரை பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடி புகைப்படங்களை எடுத்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரு இளைஞர்களை பலாலி பொலிஸார் கைது செய்துள்ளனர் 
 
வெசாக் தினத்தினை முன்னிட்டு , விசேட வழிபாடுகள் தையிட்டி விகாரையில் நடைபெற்று வரும் நிலையில் , விகாரைக்கு சற்று தொலைவில் , காணி உரிமையாளர்கள் போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர் 
 
இந்நிலையில் வடமராட்சி பகுதியை சேர்ந்த இரு இளைஞர்கள் , விகாரைக்கு செல்வதாக கூறி விகாரை பகுதிக்கு சென்று , அங்கு சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடி புகைப்படங்களையும் எடுத்துள்ளனர் 
 
அதனை அவதானித்த பொலிஸார் இருவரிடமும் விசாரணைகளை முன்னெடுத்த வேளை முன்னுக்கு பின் முரணான தகவல்களை வழங்கியதை அடுத்து , இருவரையும் கைது செய்து பலாலி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர் 
 
 
You might also like

Leave A Reply

Your email address will not be published.