;
Athirady Tamil News

மக்களின் சோகத்திலும் துன்பத்திலும் அரசியல் செய்ய வேண்டிய தேவை எமக்கில்லை – ரஜீவன் எம்.பி காட்டம்

0

மக்களின் சோகத்திலும் துன்பத்திலும் அரசியல் செய்ய வேண்டிய தேவை தேசிய மக்கள் சக்திக்கு இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெய்சந்திரமூர்த்தி தெரிவித்துள்ளார். 
 
யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் சனிக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். 
 
மேலும் தெரிவிக்கையில் 
 
பருத்தித்துறையில் இருந்து கடற்தொழிலுக்கு சென்ற நான்கு கடற்தொழிலாளர்கள் காணாமல் போனமை தொடர்பில் அவர்களின் குடும்ப உறுப்பினர்களே சந்தித்து நிலமைகளை கேட்டறிந்து கொண்டோம். 
 
அதன் அடிப்படையில் அவர்களை தேடும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.விமான படையினரின் உதவிகள் நடப்பட்டன. அத்துடன் கடற்படையினரின் உதவியுடன் தேடுதல் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. 
 
இதில் அரசியல் செய்ய வேண்டிய தேவை எமக்கு இல்லை., காணாமல் போன நான்கு பேரின் உயிர்களும் மிக பெறுமதியானவை. அவர்களை உயிருடன் மீட்க வேண்டும் என்பதற்காகவே நாம் தீவிரமாக முயற்சித்து வருகிறோம்
 
கடற்தொழிலாளர்கள் காணாமல் போன விடயம் தொடர்பில்  ,கடற்தொழில் அமைச்சர் , உடனடியாகவே பாதுகாப்பு அமைச்சு ஊடாக கடற்படையினர் மற்றும் விமான படையினரின் உதவிகளை நாடி தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
 
 அத்துடன் கடற்தொழில் நீரியல் வளத்துறையினர் , அனர்த்த முகாமைத்துவ பிரிவினர், தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என அனைத்து தரப்பினரும் தேடுதல் பணிக்கான நடவடிக்கைகளை முன்னெடுத்தனர். 
 
சிலர் அரசியல் காழ்ப்புணர்ச்சியில் எமது அரசாங்கத்தை குறை கூற்றும் முகமாக கடற்தொழிலாளர்கள் காணாமல் போன விடயத்தை கையாள முனைகின்றனர் என தெரிவித்தார். 
 
 
You might also like

Leave A Reply

Your email address will not be published.