;
Athirady Tamil News

இஸ்ரேல், ஹிஸ்புல்லா இடையே சண்டை நிறுத்தம் ; டிரம்ப் தகவல்

0

பெரூட்,

ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28ம் தேதி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல், அரபு நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இந்த மோதலால் மத்திய கிழக்கில் பதற்றமான சூழ்நிலை நிலவியது. அதேவேளை, இந்த மோதலில் ஈரானுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா ஆயுதக்குழுவினர் இஸ்ரேல் மீது தாக்குதலை தொடங்கினர்.

இஸ்ரேல் – ஹிஸ்புல்லா மோதல்
இதனால், இஸ்ரேல் – ஹிஸ்புல்லா ஆயுதக்குழுவினர் இடையே மோதல் ஏற்பட்டது. லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா ஆயுதக்குழுவினர், ஹிஸ்புல்லாவின் ஆயுதக்கிடங்குகள், கட்டுப்பாட்டு மையங்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வந்தது. ஹிஸ்புல்லா ஆயுதக்குழுவினரும் இஸ்ரேல் மீது அவ்வப்போது டிரோன்கள், ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தி வந்தனர்.

இந்நிலையில், இஸ்ரேலும், ஹிஸ்புல்லா ஆயுதக்குழுவினரும் தற்காலிக சண்டை நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார். இரு தரப்பும் சண்டை நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளதாகவும், தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.