;
Athirady Tamil News

பெற்ற பிள்ளையை சித்ரவதை செய்து கொன்ற தாய்! கேரளாவில் அதிர்ச்சி

0

கேரளாவில் ஒன்றரை வயது குழந்தை சித்ரவதை செய்து கொல்லப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவின் நெடுமங்காடு அருகே பனவூரை சேர்ந்தவர் அகிலா, இவரது கணவர் இறந்துவிட்டார், ஒன்றரை வயது குழந்தையுடன் அஷ்கர்(காதலனுடன்) வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த மாதம் 29ம் தேதி குழந்தை திடீரென மயங்கிவிட்டதாக கூறி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர், குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

குழந்தையின் பிரேத பரிசோதனை அறிக்கையின் படி, குழந்தையின் மரணத்திற்கு காயங்களே காரணம் என தெரியவந்தது, இதனை தொடர்ந்து அகிலா மற்றும் அஷ்கரை போலிசார் கைது செய்தனர்.

இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் கூறுகையில், கடந்த சில மாதங்களாகவே இந்த குடும்பம் இங்கு வசித்து வந்த நிலையில் அடிக்கடி குழந்தையின் அலறல் சத்தம் கேட்டதாக தெரிவிக்கின்றனர்.

குழந்தையின் இரண்டு கைகளிலும் கட்டு போடப்பட்டிருந்தது என்றும், கைது நடவடிக்கைக்கு முன்பாகவே குழந்தையின் ஆடைகளை எரிக்க தம்பதியினர் முயன்றதாகவும் தெரிவிக்கின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.