உருக்கு ஆலையில் பயங்கர விபத்து: எட்டு பேருக்கு நேர்ந்த கோர முடிவு
இந்தியாவின் விசாகப்பட்டினத்திலுள்ள உருக்கு ஆலையில் நிகழ்ந்த விபத்தொன்றில், எட்டு பேர் கோர மரணமடைந்தார்கள்.
உருக்கு ஆலையில் பயங்கர விபத்து
நேற்று முன்தினம் மாலை 4.15 மணியளவில், விசாகப்பட்டினம் உருக்கு ஆலையில், உருகிய எஃகு வைக்கப்பட்டிருந்த கலன் ஒன்று வெடித்துச் சிதறியுள்ளது.
கலன் வெடித்ததால், அதிலிருந்த சூடான உருகிய எஃகு சிதறி கொட்டியதில் எட்டு பேர் உயிரிழந்துள்ளார்கள், ஆறு பேர் காயமடைந்துள்ளார்கள்.
காயமடைந்தவர்களில் இருவரது நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
சுமார் 150 டன் எடையுள்ள எஃகு, சுமார் 1,500 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலையில் உருக்கப்பட்டு, ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு கொண்டுசெல்லப்படும்போது, எஃகு வைத்திருந்த கலன் வெடிக்க, கொதிக்கும் அந்த எஃகு அங்கு வேலை செய்துகொண்டிருந்த பணியாளர்கள் மீது கொட்டியதில் அவர்கள் உயிரிழந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த கோர சம்பவம் தொடர்பில் அதிகாரிகள் விசாரணை ஒன்றைத் துவக்கியுள்ளார்கள்.