;
Athirady Tamil News

தேனிலவுக்கு முசோரி சென்ற டெல்லி ஐடி ஊழியர் சடலமாக மீட்பு

0

முசோரி: டெல்லியைச் சேர்ந்த ராதா காயத்ரி (27) குருகிராமில் உள்ள ஒரு ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவர் புனே நகரில் ஐடி துறையில் பணிபுரியும் தனது கணவர் சவும்யா ஸ்ரீசரனுடன் உத்தராகண்ட் மாநிலத்துக்கு சுற்றுலா சென்றிருந்தார்.

டெல்லியிலிருந்து ரிஷிகேஷ் சென்ற இத்தம்பதி பிறகு அங்கிருந்து கடந்த 14ம் தேதி இரவு முசோரி வந்துள்ளனர். திப்ரிதார் பகுதியில் உள்ள ஒரு விடுதியில் தங்கிய இத்தம்பதியினர் இரவில் மது அருந்திவிட்டு தூங்கச் சென்றுள்ளனர்.

இந்நிலையில் மறுநாள் காலையில் ஸ்ரீசரண் எழுந்து பார்த்தபோது, காயத்ரி ஆடைகளின்றி, எவ்வித அசைவும் இல்லாமல், தரையில் சிறுநீர் வெள்ளத்தில் கிடந்ததாகவும் அவரது மூக்கிலிருந்து ரத்தம் வழிந்ததாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பான தகவலின் பேரில் முசோரி போலீஸார் ஆம்புலன்ஸுடன் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். ஆம்புலன்ஸில் இருந்த மருந்தாளுநர், காயத்ரியை பரிசோதித்துவிட்டு அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார்.

இதையடுத்து காயத்ரியின் உடலை பிரேதப் பரிசோதனைக்காக டேராடூனில் உள்ள கொரோனேஷன் மருத்துவமனைக்கு போலீஸார் அனுப்பி வைத்தனர். இத்தம்பதிக்கு கடந்த 2025ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி திருமணம் நடந்துள்ளது. காயத்ரி, ஸ்ரீசரண் ஆகிய இருவரும் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்தவர்கள் ஆவர். இந்த சம்பவம் தொடர்பாக முசோரி போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.