;
Athirady Tamil News

யாழ். போதனாவில் 300 மில்லியனில் கத் லாப்

0
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு நேற்றைய தினம் சனிக்கிழமை விஜயம் செய்த  சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ சுமார் 300 மில்லியன் ரூபாய் பெறுமதியான “கத் லாப்” (Cath lap) ஆய்வு கூட பிரிவினை திறந்து வைத்தார்.

இதய நோய்களைக் கண்டறியவும், அறுவை சிகிச்சை இல்லாமல் குணப்படுத்தவும் பயன்படும் ஒரு அதிநவீன மருத்துவப் பரிசோதனைக் கூடமான “கத் லாப்” யாழ் . போதனா வைத்தியசாலையில் திறந்து வைக்கப்பட்டதன் ஊடாக வடமாகாண மக்களுக்கான மிக பெரிய வரப்பிரசாதமாக இது அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

குறித்த நிகழ்வில் கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரர் , தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான , ச. சிறிபவனந்தராசா , க.இளங்குமரன் , ரஜீவன் ஜெயசந்திரமூர்த்தி உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
You might also like

Leave A Reply

Your email address will not be published.