;
Athirady Tamil News

நான் நடத்திய போரில் இறந்த ராணுவீரர்கள் மிகவும் குறைவு ; டிரம்ப் ஷாக் தகவல்!

0

தான் நடத்திய போரில் இறந்த ராணுவீரர்கள் மிகவும் குறைவு என டிரம்ப் கூறியுள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா கடந்த 50 வருடங்களுக்கு மேலாகவே பல நாடுகளிலும் போர் தொடுத்து வருகின்றன.

அந்த போர்களில் எதிரி நாடுகள் தாக்கியதில் அமெரிக்க ராணுவ வீரர்கள் பலரும் உயிரிழந்திருக்கிறார்கள். அமெரிக்கா இதுவரை ஆப்கானிஸ்தான், ஈராக், வியட்நாம், கொரியா, வெனிசுலா, ஈரான் போன்ற நாடுகளின் போரை நடத்தி இருக்கிறது.

அதில் பல ஆயிரம் ராணுவ வீரர்கள் இறந்து போயிருக்கிறார்கள். நான்கு மாதங்களுக்கு முன்பு ஈரான் அணு ஆயுதம் வைத்துக்கொள்ளக்கூடாது எனக் கூறி அமெரிக்காவும், இஸ்ரலும் சேர்ந்து அந்த நாட்டின் மீது போரை துவங்கியது.

இதையடுத்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நடத்திய போரால் பல்லாயிரம் வீரர்கள் இறந்து போய்விட்டதாக அந்நாட்டின் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்ட துவங்கியிருக்கிறார்கள்.

அதோடு அமெரிக்காவுக்கு பல கோடி மில்லியன்கள் செலவாகிவிட்டதாகவும் சொல்லப்பட்டு வருகிறது. இந்நிலையில், இது தொடர்பாக தனது சமூக வலைதளத்தள பக்கத்தில் டொனால்ட் டிரம்ப் ,

20 வருடங்கள் நடந்த ஆப்கானிஸ்தான் போரில் 2 ஆயிரம் வீரர்களும், 8 வருடங்கள் நடந்த ஈராக் போரில் 4,800 வீரர்களும், 19 வருடம் நடந்த வியட்நாம் போரில் 56,220 பேரும், 3 வருடங்கள் நடந்த கொரியன் போரில் 36,575 வீரர்களும், ஒரு நாள் நடந்த வெனிசுலா போரில் யாரும் இறக்கவில்லை, ஈரானுடான 4 மாத போரில் 18 அமெரிக்கா ராணுவ வீரர்கள் மட்டுமே இறந்துள்ளனர் என டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்

You might also like

Leave A Reply

Your email address will not be published.