;
Athirady Tamil News

பேருந்து மற்றும் முச்சக்கர வண்டி நேருக்கு நேர் மோதி ஒருவர் உயிரிழப்பு; மூவர் காயம்

0

மொனராகலை – வெடிகும்புர வீதியின் 4ஆம் கல்வெட்டுக்கு அருகில் இன்று (28) பேருந்து மற்றும் முச்சக்கர வண்டி நேருக்கு நேர் மோதிய விபத்தில் வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், சிறுமி உட்பட மூவர் காயமடைந்துள்ளனர்.

மொனராகலையிலிருந்து வெடிகும்புர நோக்கிப் பயணித்த முச்சக்கர வண்டியும், எதிர்த்திசையில் மொனராகலை நோக்கிச் சென்ற பயணிகள் பேருந்தும் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த 8 வயதுச் சிறுமி, பெண் ஒருவர் உள்ளிட்ட நால்வர் காயமடைந்து மொனராகலை மாவட்ட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர்.

எனினும், அவர்களில் சுமார் 70 வயதுடைய வயோதிபர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் மொனராகலை, அலியாகத்த பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மொனராகலை பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்துப் பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.