;
Athirady Tamil News

இலங்கை முழுவதும் பாடசாலைகள் மூடப்பட்டமை தொடர்பில் சர்ச்சை

0

சீரற்ற காலநிலை காரணமாக நாடு முழுவதும் அனைத்து பாடசாலைகளையும் மூட கல்வியமைச்சு எடுத்த தீர்மானம் சர்ச்சை நிலை ஏற்பட்டுள்ளது.

பாடசாலைகளை மூடுவது தொடர்பில் கல்வியமைச்சு தம்மிடம் எந்தவொரு ஆலோசனையும் பெறவில்லை என வளிமண்டவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பாடசாலைகளை மூடுவது குறித்து எந்தவோரு ஆலோசனை பெற்றுக்கொள்ளாமல் முடிவு எடுக்கப்பட்டதாக திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமான்ன குற்றம் சாட்டியுள்ளார்.

அர்னாப் புயலின் தாக்கம்
நேற்றையதினம் பாடசாலைகள் மூடப்பட்டமைக்கும் திணைக்களத்திற்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லையென அவர் குறிப்பிட்டுள்ளார்.

அர்னாப் புயலின் தாக்கம் காரணமாக நேற்றையதினம் நாடு முழுவதுமுள்ள பாடசாலைகள் மூடப்பட்டன.

எனினும் நேற்றையதினம் மழையினால் எந்தவொரு பகுதிக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.