;
Athirady Tamil News

யாழ். செல்வச் சந்நிதி பக்தர்கள் பலாலி வீதியில் நடந்து செல்ல அனுமதி

0

யாழ்ப்பாணம் செல்வச் சந்நிதி ஆலயத்தின் தேர் மற்றும் தீர்த்த உற்சவங்களை முன்னிட்டு, இராணுவ உயர் பாதுகாப்பு வலயத்தினூடாகச் செல்லும் பலாலி வீதியில் பக்தர்கள் நடந்து செல்லவும், வாகனங்களை தரித்து நிறுத்தவும் இராணுவத்தினர் அனுமதி வழங்கியுள்ளனர்.

செல்வச் சந்நிதி ஆலயத்தின் தேர் திருவிழா நாளை (27) வியாழக்கிழமையும், தீர்த்தத் திருவிழா நாளை மறுதினம் (28) வெள்ளிக்கிழமையும் நடைபெறவுள்ளது.

இதனை முன்னிட்டு ஆலயத்திற்கு காவடிகள் மற்றும் பாத யாத்திரைகளாகச் செல்லும் பக்தர்களின் நலனை கருத்திற்கொண்டு, பலாலி வீதியை பயன்படுத்துவதற்கு விசேட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, குறித்த வீதியூடாக காலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை பக்தர்கள் நடந்து செல்லவும், தேவையான இடங்களில் வாகனங்களை தரித்து நிறுத்தவும் இராணுவத்தினர் அனுமதி வழங்கியுள்ளனர்.

பலாலி வீதி இராணுவ உயர் பாதுகாப்பு வலயத்தினூடாகச் செல்வதால், கடந்த வருடம் குறித்த வீதியில் பொதுமக்கள் நடந்து செல்லவும் வாகனங்களை தரித்து நிறுத்தவும் அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

எனினும், பொதுமக்களின் போக்குவரத்து தேவையை கருத்திற்கொண்டு நேரக் கட்டுப்பாட்டுடன் வீதி திறந்து விடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.