தென்னிலங்கையில் மர்ம மரணம் ; விடுதி அறையில் அழுகிய உடல் மீட்பு
காலி அம்பலாங்கொடை நகரின் நடுப்பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் மர்மமான முறையில் இறந்து கிடந்த ஆண் ஒருவரின் உடலம் நேற்று (25) நண்பகல் மீட்கப்பட்டுள்ளதாக அம்பலாங்கொட காவல்துறை தெரிவித்துள்ளது.
இவ்வாறு கண்டெடுக்கப்பட்டவர் அம்பலாங்கொட மகா பன்சல வீதியில் உள்ள விடுதியில் தனியாக தங்கியிருந்த 67 வயதுடைய ரோஹன் ஆரியதிலக என்பவராவார்.
இவர் பெந்தோட்டை சுற்றுலா விடுதி ஒன்றில் சிற்றுண்டி தயாரிப்பாளர் என காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த நபரின் உடலம் கண்டெடுக்கப்பட்டபோது, அது மிகவும் அழுகி, வீங்கி, துர்நாற்றம் வீசியதாகத் தெரிவித்த காவல்துறை, இவர் சுமார் ஐந்து நாட்களுக்கு முன்பு இறந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கிறது.
குறித்த நபர் தங்கியிருந்த அறையில் இருந்து அதிக துர்நாற்றம் வீசியது தொடர்பாக அயலவர் ஒருவர் மேற்கொண்ட சோதனையின்போதே இந்தச் சடலம் கண்டெடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.