;
Athirady Tamil News

இலங்கையில் ஆபத்தாக மாறியுள்ள டெங்கு தொற்று

0

நடப்பாண்டில் இதுவரை 94,805 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், டெங்கு காரணமாக 72 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

மொத்த நோயாளர்களில் 52.92 வீதத்துக்கும் அதிகமானோர் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளனர். மாவட்ட ரீதியில் கம்பஹாவில் அதிகபட்சமாக 20,207 நோயாளர்களும், கொழும்பில் 18,794 பேரும் பதிவாகியுள்ளனர்.

மாதாந்த அடிப்படையில் ஜூலை மாதத்தில் அதிகபட்சமாக 29,962 நோயாளர்கள் பதிவாகியுள்ளது. நாடு முழுவதும் உள்ள 76 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் தொடர்ந்தும் அதிஅபாய வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.