;
Athirady Tamil News

ஹார்முஸ் ஜலசந்தி அருகே உள்ள லாரக் தீவு மீது அமெரிக்கா தாக்குதல்: பதிலடி கொடுப்போம் என ஈரான் எச்சரிக்கை

0

ஈரானின் லாரக் தீவில் அமெரிக்க ராணுவம் 2 ஏவுகணை ஏவுதளங்களை தாக்கி அழித்துள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியில் கண்ணிவெடிகளை வைப்பதற்காக ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படையினர் ஏவுகணைகளை தயார் செய்து கொண்டிருந்ததை கண்டறிந்ததை தொ டர்ந்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.ஈரானின் தெற்கு பகுதியில், ஹார்முஸ் தீவுக்கு தெற்கிலும், கெஷ்ம் தீவுக்கு கிழக்கிலும் லாரக் தீவு அமைந்துள்ளது. ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இருந்து சுமார் 1,100 கிலோமீட்டர் தொலைவில் இந்த தீவு உள்ளது.

ஜூலை மாத இறுதிக்கு பிறகு ஈரான் மீது அமெரிக்கா நடத்திய முதல் நேரடி தாக்குதல் இதுவாகும். ஹார்முஸ் நீரிணையில் கடல் கண்ணிவெடிகளை பதிக்க ஈரான் முயன்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் ஏற்கனவே எச்சரித்திருந்தார்.அமெரிக்காவின் தாக்குதலை ஈரானும் உறுதி செய்துள்ளது. இதில் ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் சிலர் உயிரிழந்தும் காயமடைந்தும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த தாக்குதலுக்கு உரிய “பதிலும் தண்டனையும்” வழங்கப்படும் என்று ஈரான் எச்சரித்துள்ளது. இதனால் அமெரிக்கா-ஈரான் இடையேயான பதற்றம் மீண்டும் அதிகரித்துள்ளது. அமெரிக்கா-இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது தாக்குதல் தொடங்கி 6 மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், இந்த புதிய தாக்குதல் மத்திய கிழக்கு பகுதியில் மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.