;
Athirady Tamil News

சைப்ரஸ் நாட்டில் படகு விபத்தில் 8 பேர் பலி

0

போத்ரம்

சைப்ரஸ் நாட்டில் படகு விபத்தில் 8 பேர் பலியாகி உள்ளனர்.

சைப்ரஸ் நாட்டின் வடகடலோர பகுதியில் டயானா பீச்சில் படகு ஒன்று கவிழ்ந்தது. அந்த படகு, துருக்கி ஆக்கிரமிப்புக்கு உட்பட்ட வடக்கு சைப்ரசில் உள்ள கைரேனியா நகரில் இருந்து துருக்கியின் டசுகு நகருக்கு புறப்பட்டது. படகில் 270 பேர் பயணித்தனர்.

8 பேர் பலி

கைரேனியாவில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் நடுக்கடலில் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் படகில் இருந்த பயணிகள் கடலில் விழுந்து தத்தளித்தனர். இதுபற்றி தகவலறிந்த மீட்புக்குழுவினர் விரைந்து சென்று கடலில் சிக்கி தத்தளித்தவர்களை மீட்டனர்.

இந்த விபத்தில் 8 பேர் பலியாகி உள்ளனர். இதுபற்றி சைப்ரஸ் பிரதமர் உனல் உஸ்டெல் கூறும்போது, இதுவரை 237 பேர் மீட்கப்பட்டு உள்ளனர். காணாமல் போன 22 பேரை தேடும் பணி நடந்து வருகிறது என்று கூறினார். இந்த சம்பவத்துடன் தொடர்புடைய படகு கேப்டன் உள்பட 8 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் என்றும் அவர் கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.