;
Athirady Tamil News

அமெரிக்காவில் டீசல் விலை வரலாறு காணாத உயர்வு!

0

ஈரான் போர் காரணமாக அமெரிக்காவில் டீசல் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது.

அமெரிக்கா – ஈரான் இடையேயான 6 மாதகாலப் போர் காரணமாக உலகளவில் எரிபொருள் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அமெரிக்காவில் டீசல் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது.

அமெரிக்காவில் தற்போது டீசல் ஒரு கேலனுக்கு $5.85 (இந்திய மதிப்பில் ரூ. 552.42) என்ற அளவில் விற்பனையாகிறது. இது அங்கு இதுவரை இல்லாத அளவைத் தொட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

(ஒரு கேலன் என்பது 3.785 லி கொள்ளளவு)

சரக்கு மற்றும் விநியோகம் சார்ந்த சேவைகள் பெருமளவு டீசலைச் சார்ந்தே இருப்பதால், டீசல் விலை உயர்வு அன்றாட பயன்பாட்டுப் பொருள்களின் போக்குவரத்துச் செலவுகளை அதிகரிக்கும். இதனால், பல்வேறு துறை சார்ந்த வணிகங்களின் செலவுகளும் அதிகரித்துள்ளன.

மேலும், அமெரிக்காவில் இந்த விலை உயர்வால் அரசியல் ரீதியான தாக்கங்கள் ஏற்படும் என்றும் கூறப்படுகிறது. நவம்பரில் நடைபெறவுள்ள இடைக்காலத் தேர்தல்களில் வாக்காளர்களின் கவனம் பொருளாதார விவகாரங்களைப் பொருத்தே அமைய வாய்ப்புள்ளது.

டீசலைப் போன்றே பெட்ரோலின் விலையும் அங்கு உயர்ந்து வருகின்றது. ஆனால், டீசலுடன் ஒப்பிடுகையில் பெட்ரோல் விலையேற்ற வேகம் குறைவே. அமெரிக்காவில் கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ஒரு கேலன் பெட்ரோலின் விலை $3.20 ஆக இருந்த நிலையில், தற்போது அது $4.15 ஆக உயர்ந்துள்ளது.

சமீப நாள்களில் போர் மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், டீசல் விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாகப் பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.