;
Athirady Tamil News

முஸ்லிம் கலைஞரின் கைவண்ணத்தில் உருவான விநாயகர் சிலை

0

பாகிஸ்தான்,

பாகிஸ்தானின் கராச்சி நகரில் ‘கணேஷ் மத் மந்திர்’ கோவிலில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைக்கு, இஸ்லாமியக் கலைஞர் ஒருவர் தனது கைவண்ணத்தால் வண்ணம் தீட்டி அசத்தியுள்ளார்.

முஸ்லிம் கலைஞரின் கைவண்ணத்தில் உருவான விநாயகர் சிலை

பாகிஸ்தானின் கராச்சி நகரில் வசிக்கும் மராட்டிய குடும்பம் சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா ஏற்பாடுகள் கோலாகலமாக நடந்து வருகின்றன. அங்குள்ள ‘கணேஷ் மத் மந்திர்’ கோவிலில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைக்கு, இஸ்லாமியக் கலைஞர் ஒருவர் தனது கைவண்ணத்தால் வண்ணம் தீட்டி அசத்தியுள்ளார்.

‘கலைக்கும் பக்திக்கும் மதமில்லை’

தலையில் தொப்பியுடன், வெள்ளை நிற விநாயகர் சிலைக்கு ஸ்பிரே பெயிண்ட் மற்றும் பிரஷ் மூலம் தங்கம், வெள்ளி நிறங்களில் அவர் நுணுக்கமாக வேலைப்பாடுகளை செய்து வண்ணமயமான விநாயகராக மாற்றும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளன. கராச்சியில் வசிக்கும் அமர் பிரகாஷ் என்ற மராட்டியர் சமூக வலைதளத்தில் பகிர்ந்த இந்த வீடியோ, ‘கலைக்கும் பக்திக்கும் மதமில்லை’ என்பதை உணர்த்தி இணையதளவாசிகளின் நெஞ்சங்களை நெகிழ வைத்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.