Gov Pay பயன்படுத்தும் பொது மக்களுக்கு அவசர எச்சரிக்கை
‘Gov Pay’ அமைப்பைப் போன்ற போலி இணையதளத்தை உருவாக்கி பொதுமக்களின் பணம் மற்றும் முக்கியமான தகவல்களைத் திருடும் மோசடியொன்று இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
‘Gov Pay’ மூலம் பணத்தைச் செலுத்துவதற்கு வேறு எந்த இணையதளமும் கிடையாது என்பதால், இத்தகைய நிதி மோசடிகளில் சிக்கி ஏமாற வேண்டாம் என்று பொலிஸார் அறிவுறுத்துகின்றனர்.
புதிய நடைமுறை
பொதுமக்களின் சேவையை இலகுபடுத்தும் நோக்கிலும், நிதி மோசடிகளைக் குறைக்கும் நோக்கிலும் போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதங்களை ‘Gov Pay’ முறைமையின் மூலம் செலுத்தும் நடைமுறை இந்த ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.
இருப்பினும், ‘Gov Pay’ அமைப்பைப் போன்ற போலி இணையதளத்தை உருவாக்கி, பொதுமக்களின் பணம் மற்றும் ரகசியத் தரவுகளை தந்திரமாகத் திருடும் மோசடி இடம்பெற்று வருவதாக பொலிஸார் சுட்டிக்காட்டுகின்றனர்.
மோசடி
இந்த போலி இணையதளத்தின் இணைப்புகள் (Links), குறுஞ்செய்திகள் (SMS) மற்றும் வாட்ஸ்அப் (WhatsApp) செய்திகள் மூலமாக கையடக்க தொலைபேசிகளுக்கு அனுப்பப்பட்டு, பொதுமக்களின் பணம் இவ்வாறு திருடும் மோசடி இடம்பெறுவதாக குறிப்பிடப்படுகிறது.
‘Gov Pay’ மூலம் பணத்தைச் செலுத்துவதற்கு வேறு எந்த இணையதளமும் இல்லாததால், இவ்வாறான போலி நிதி மோசடிகளில் சிக்க வேண்டாம் என போக்குவரத்துப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் டபிள்யூ.பி.ஜே.சேனாதீர, பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.