;
Athirady Tamil News

யாழில். துரித கெதியில் முன்னெடுக்கப்படும் குளங்களைத் தூர்வாரும் நடவடிக்கைகள்

0
யாழ்ப்பாண மாவட்டத்தின் நீர்வளத்தைப் பாதுகாத்து, குளங்களின் நீர்ப்பிடிப்புத் திறனையும் பயன்பாட்டுத் திறனையும் மேம்படுத்தும் நோக்கில் குளங்களைத் தூர்வாரும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதன் அடிப்படையில், கந்தரோடை குளம், அராலி  பாலத்துக்கு அண்மையில் உள்ள வழுக்கை ஆற்றுப்படுக்கையில் நன்னீரைத் தேக்கும் செயற்றிட்டம் மற்றும் கற்குளம் – அல்லைப்பிட்டி ஆகிய பகுதிகளில் தூர்வாரும் பணிகள் அந்தந்த உள்ளூராட்சி மன்றங்களின் பங்கேற்புடனும் ஒத்துழைப்புடனும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

குறித்த பகுதிகளில் நீர்த்தேக்கங்களின் கொள்ளளவை அதிகரித்தல், நீர்ப்பிடிப்புப் பகுதிகளைச் சீரமைத்தல் மற்றும் கிடைக்கக்கூடிய நீர்வளத்தைச் சிறந்த முறையில் பயன்படுத்தக்கூடிய நிலைமையை உருவாக்குதல் ஆகிய நோக்கங்களுடன் தூர்வாரும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

எல் நோ தாக்கத்தினால் இம்முறை யாழ்ப்பாணத்திற்கு அதிக மழை வீழ்ச்சி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் , மழை காலம் ஆரம்பிக்க முதல் , குளங்களைத் தூர்வாரும் நடவடிக்கைகள் துரித கெதியில் முன்னெடுக்கப்படுகின்றன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.