பொலிவியா: ராணுவ தளத்தில் வெடி விபத்து – பலி எண்ணிக்கை 9 ஆக உயர்வு
சுக்ரெ,
பொலிவியாவில் ராணுவ தளத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது.
வெடிவிபத்து
இதனிடையே, இந்த ராணுவ தளத்தில் பீரங்கி படைப்பிரிவில் கடந்த 4ம் தேதி பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் 2 ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியானது.
பலி எண்ணிக்கை உயர்வு
இந்நிலையில், ராணுவ தளத்தில் ஏற்பட்ட உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது. வெடி விபத்தில் 84 பேர் படுகாயமடைந்துள்ளனர். அதேவேளை, இந்த வெடிவிபத்தில் 7 பேர் மாயமாகியுள்ளதாகவும், இடிபாடுகளுக்குள் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை, இந்த வெடி விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.