இரகசிய தகவலால் தமிழர் பகுதியில் பிடிபட்ட நபர் ; சிக்கிய ஆபத்தான பொருட்கள்
அம்பாறை மாவட்டம், நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் 15 கிராமுக்கும் அதிகமான ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் 49 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் நேற்று வியாழக்கிழமை (10) விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருக்கோயில் விசேட அதிரடிப்படை அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போதே இக் கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
போதைப்பொருள்
கங்வெல்ல பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடமிருந்து 15 கிராமுக்கும் அதிகமான ‘ஐஸ்’ போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.
திருக்கோயில் விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரியின் தலைமையிலான குழுவினரால் கைது செய்யப்பட்ட இச் சந்தேகநபர், மீட்கப்பட்ட போதைப்பொருட்களுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக நிந்தவூர் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் தொடர்பில் நிந்தவூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.