;
Athirady Tamil News

ஜோர்டானில் நள்ளிரவில் அமெரிக்க ராணுவ விமானங்கள் மீது ஈரான் வான்வழி தாக்குதல்

0

தெஹ்ரான்

ஜோர்டானில் நள்ளிரவில் அமெரிக்க ராணுவ விமானங்கள் மீது ஈரான் வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து, கடந்த பிப்ரவரி 28-ந்தேதி ஈரான் மீது வான்வழி தாக்குதலில் ஈடுபட்டது. இதில், ஈரான் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் படுகொலை செய்யப்பட்டனர்.

அமைதி உடன்பாடு

இதற்கு ஈரானும் பதிலடி கொடுத்தது. எனினும், அமெரிக்கா-ஈரான் இடையே அமைதி உடன்பாடு ஏற்பட்டது. இதனால், அந்த பகுதியில் பதற்றம் தணிந்துள்ளது. எனினும், தொடர்ந்து இரு நாடுகளும் அவ்வப்போது தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த நிலையில், ஜோர்டான் நாட்டின் முவாபக் சால்டி விமான தளத்தில் அமெரிக்க ராணுவ விமானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. நேற்று நள்ளிரவில் அதன் மீது ஈரான் கடுமையான வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது. இதில், ஏ-10 தண்டர்போல்ட் தாக்குதல் விமானம் (வார்தாக்) கடுமையாக சேதமடைந்தது. தவிர எட்டு, எப்-15 ரக போர் விமானங்கள் சிறிய அளவில் சேதமடைந்தன.

ஈரான் கப்பல்கள்

எனினும், இதனால் அமெரிக்கர்கள் யாருக்கும் காயமோ அல்லது உயிரிழப்போ ஏற்படவில்லை என சி.பி.எஸ். நியூஸ் செய்தி நிறுவனம் தகவல் தெரிவிக்கின்றது. ஈரானின் கப்பல்கள் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல்களை நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஜோர்டான் இந்த தாக்குதலில் ஈடுபட்டு உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.