திருகோணமலையில் இரவில் எருமை மாட்டால் வந்த வினை ; பறிபோன உயிர்
திருகோணமலை மாவட்ட தம்பலாகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்பலாகாமம் கிண்ணியா பிரதான வீதியில் எருமை மாட்டுடன் வேன் மோதியதில் புதன்கிழமை (23) இரவு சுமார் 11 மணியளவில் விபத்து சம்பவம் இடம் பெற்றுள்ளது.
கிண்ணியாவில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற வேன், முள்ளியடி பகுதியில் எருமை மாட்டுடன் மோதியதில் குறித்த விபத்து சம்பவம் இடம் பெற்றுள்ளது.
மேலதிக விசாரணை
இதில் வேன் சாரதி பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
குறித்த விபத்தில் சிக்கிய எருமை மாடு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளன.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்பலகாமம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
குறித்த விபத்து இடம் பெற்ற பகுதியில் மக்களின் அதிக போக்குவரத்து மற்றும் குடியிருப்பு பகுதியாக காணப்படுகின்ற போதிலும் குறித்த வீதியில் போதிய வீதி மின் விளக்குகள் இன்மை காரணமாகவும் இருள் சூழ்ந்த நிலையில் வீதி காணப்படுகிறது.