;
Athirady Tamil News

வெள்ளை மாளிகையில் 3 ஊடகங்களுக்கு தடை! டிரம்பை புறக்கணிக்க செய்தி நிறுவனங்கள் முடிவு!

0

வெள்ளை மாளிகைக்குள் நுழைய மூன்று செய்தி நிறுவனங்களுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தடை விதித்துள்ளார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்காவின் முன்னணி செய்தி நிறுவனங்கள் டிரம்ப் தொடர்பான செய்தி ஒளிபரப்பை நிறுத்துவதாக அறிவித்துள்ளனர்.

நேர்மையற்ற முறையில் பொய்யான செய்திகளை வெளியிடுவதாக குற்றம்சாட்டி, சிஎன்என், பொலிடிகோ மற்றும் எம்எஸ் நவ் ஆகிய தொலைக்காட்சி நிறுவனங்கள் வெள்ளை மாளிகைக்குள் நுழையத் தடை விதிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்திருந்தார்.

தொடர்ந்து, சனிக்கிழமை முதல் வெள்ளை மாளிகைக்குள் தாங்கள் அனுமதிக்கப்படவில்லை என்று அந்நிறுவனங்கள் குற்றச்சாட்டை முன்வைத்தன.

மேலும், டிரம்பின் உத்தரவை எதிர்த்து மூன்று நிறுவனங்களும் நீதிமன்றத்தை நாடியுள்ளன.

இதனிடையே, ஊடகங்களுக்கு எதிராக டிரம்பின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்காவின் முன்னணி செய்தி நிறுவனங்கள், டிரம்ப் தொடர்பான செய்தி ஒளிபரப்பை நிறுத்துவதாக அறிவித்துள்ளன.

நியூயார்க் டைம்ஸ் மற்றும் வாஷிங்டன் போஸ்ட் உள்ளிட்ட நிறுவனங்கள், டிரம்ப் பங்கேற்ற நிகழ்வுகள் தொடர்பான எந்த செய்தியையும் திங்கள்கிழமை வெளியிடவில்லை.

இதன் விளைவாக, ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் டிரம்ப் பயணித்தது, நியூ யார்க்கில் ஐ.நா. பொதுக் கூட்டத்தில் கலந்துகொள்ள சென்றது போன்ற விடியோக்கள், புகைப்படங்கள் வெளியிடப்படவில்லை.

இதனிடையே, வெள்ளை மாளிகை சார்பில் ‘டிரம்ப் டிவி’ என்ற நேரலை செய்தி ஒளிபரப்பு தொடங்கப்பட்டு, 24 மணி நேரமும் ஒளிபரப்பாகி வருகின்றது.

இதுதொடர்பாக டிரம்ப் பேசியதாவது: “இது சுவாரஸ்யமாக இருக்கிறது. ஊடகங்கள் என்னை புறக்கணிப்பதாக கூறினார்கள். ஆனால், அதைப் பற்றியெல்லாம் நான் கவலைப்பட மாட்டேன். தற்போதைய செய்தியாளர் சந்திப்புக்கு வந்துள்ள கூட்டத்தைப் பாருங்கள்” எனத் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.