;
Athirady Tamil News

பீகாரில் சோகம்: குளத்தில் மூழ்கி சிறுவர்-சிறுமியர் 6 பேர் உயிரிழப்பு

0

பாட்னா,

பீகாரில் குளத்தில் மூழ்கி சிறுவர்-சிறுமியர் 6 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலம் பாகல்பூர் மாவட்டம் தரிடா பகியர் கிராமத்தை சேர்ந்த சிறுவர் – சிறுமியர் 6 பேர் (பூஜா குமாரி (வயது 13), ராகுல் குமார் (வயது 14), விகாஷ் குமார் (வயது 13), ஆயூஷ் குமார் (வயது 12), மீனாட்சி குமாரி (வயது 12), ஜோதி குமாரி (வயது 14)) இன்று காலை கிராமத்திற்கு அருகே உள்ள குளத்திற்கு குளிக்க சென்றுள்ளனர்.

குளத்தில் மூழ்கி பலி
அனைவரும் குளித்துக்கொண்டிருந்தபோது ஒரு சிறுமி குளத்தில் மூழ்கியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சக சிறுவர், சிறுமியர் அந்த சிறுமியை மீட்க முயற்சித்தனர். அப்போது, 3 சிறுமிகள், 3 சிறுவர்கள் என 6 பேரும் குளத்தில் மூழ்கி உயிரிழந்தனர். குளிக்கச்சென்ற சிறுவர், சிறுமியர் வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் குளத்திற்கு சென்று பார்த்தனர்.

அங்கு சிறுவர், சிறுமியர் 6 பேரும் சடலமாக கிடந்ததை கண்டு பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். இந்த சம்பவம் குறித்து அறிந்த போலீசார், விரைந்து சென்று சிறுவர், சிறுமியரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.