;
Athirady Tamil News

சவுதியின் எச்சரிக்கையால் அதிரும் உலகம் ; மெக்கா நகரத்துக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்

0

இஸ்லாமியர்களின் புனித நகரமான மெக்காவுக்கு சௌதி அரேபியாவின் பொது பாதுகாப்புத் துறை ஆபாய எச்சரிக்கைகளை விடுத்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சௌதி அரேபியாவில் உள்ள மெக்கா நகரம் உள்பட செங்கடல் மாகாணமான யான்பூ, தயீஃப், ஜெட்டா மற்றும் தபுக் ஆகிய பகுதிகளுக்கு அந்நாட்டு உள்துறை அமைச்சகத்தின் பொது பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.

இதில், வழக்கமாக ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களுக்கு மட்டுமே விடுக்கப்படும் இந்த எச்சரிக்கைகளால் அந்நாட்டில் பரபரப்பான சூழல் நிலவிய நிலையில், சில நிமிடங்களில் அந்த எச்சரிக்கைகள் திரும்பப் பெறப்பட்டன.

யேமனில் ஹௌதி கிளர்ச்சிப்படைகளுக்கும், சௌதி அரசின் ஆதரவைப் பெற்ற அரசுப் படைகளுக்கும் இடையே கடந்த சில வாரங்களாக மோதல்கள் நடைபெற்று வருவதால், சௌதி அரேபியாவில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஏற்கெனவே, கடந்த வாரம் மெக்கா நகரத்தின் மீது ஹௌதிகள் தாக்குதல் நடத்த முயன்றதாகவும், அதைத் தங்களின் படைகள் இடைமறித்து முறியடித்ததாகவும் சௌதி அரசு அறிவித்தது.

இந்தச் சம்பவத்துக்கு, இந்தியா உள்ளிட்ட ஏராளமான நாடுகள் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், புனித நகரங்களின் மீது தாக்குதல் நடத்த மாட்டோம் எனவும் இது சௌதியின் பொய்ப் பிரசாரம் எனவும் ஹௌதிகள் பதிலளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.