;
Athirady Tamil News

கென்யாவில் சோகம்: வேன் மீது லாரி மோதி கோர விபத்து – மத நிகழ்ச்சிக்கு சென்ற 13 பேர் பலி

0

நைரோபி,

கென்யாவில் வேன் மீது லாரி மோதிய சம்பவத்தில் மத நிகழ்ச்சிக்கு சென்ற 13 பேர் உயிரிழந்தனர்.

கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு கென்யா. இந்நாட்டின் நகூரு பகுதியில் உள்ள கிறிஸ்தவ மத வழிபாட்டு தலத்தில் இன்று சிறப்பு மத நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த மத நிகழ்ச்சியில் பங்கேற்க மொம்பாசா நகரில் இருந்து வேனில் கிறிஸ்தவ பக்தர்கள் நகூரு பகுதிக்கு புறப்பட்டனர். அந்த வேனில் 20க்கும் மேற்பட்டோர் பயணித்தனர்.

விபத்து – 17 பேர் பலி

இந்நிலையில், நைரோபி – மொம்பாசா தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது சாலையில் வேகாமாக வந்த லாரி எதிரே வந்த வேன் மீது மோதியது. இந்த கோர விபத்தில் வேனில் பயணம் செய்த 17 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும், சிலர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.