;
Athirady Tamil News

மலையகத்தில் பலத்த மழை ; சாரதிகளுக்கு எச்சரிக்கை

0

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக, பொகவந்தலாவ பகுதியில் உள்ள தாழ்நிலப் பகுதிகளில் அமைந்துள்ள பல வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தொடர்ந்து பெய்து வரும் மழையால் அப்பகுதியில் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளதுடன், பல வீதிகளில் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், ஹட்டன் – நுவரெலியா மற்றும் ஹட்டன் – கொழும்பு பிரதான வீதிகளில் பயணிக்கும் சாரதிகள் அவதானத்துடனும், மிகுந்த கவனத்துடனும் வாகனங்களை செலுத்துமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

மேலும், தொடர்ச்சியான மழை காரணமாக மலைப்பகுதிகளில் வீதிகளில் நீர் தேங்குதல் மற்றும் வழுக்கும் நிலை ஏற்படக்கூடிய சாத்தியம் உள்ளதால், சாரதிகள் அவதானமாக செயற்படுமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.