பாரம்பரிய நீர்நிலைகளைத் தூர்வாரி புனரமைக்க வேண்டும் – வடக்கு ஆளுநர் வலியுறுத்தல்
;
ஆளுநர் மேலும் தெரிவித்ததாவது:
இன்று பல இடங்களில் வீதிகளின் நுழைவாயில்களில் பிரமாண்டமான வளைவுகள் அமைக்கப்படுகின்றன. அதற்காக புலம்பெயர் நாடுகளில் வாழும் உறவுகள் பெருமளவு நிதியை வழங்குகின்றனர். ஆனால், அந்த வளைவுக்கு அருகில் வாழும் ஏழைக் குடும்பத்தின் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக அதே அளவு கவனம் செலுத்தப்படுவதில்லை.
ஆனாலும் இன்று பல இடங்களிலும் குளங்கள், கேணிகள், கால்வாய்கள் உள்ளிட்ட பாரம்பரிய நீர்நிலைகளைத் தூர்வாரி புனரமைக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு உருவாகி வருவது மிகவும் வரவேற்கத்தக்கது.
இந்தக் கேணிக்கு அருகிலுள்ள குளத்தையும் தூர்வாரி அதன் நீர்ப்பிடிப்புப் பரப்பை மேலும் அதிகரிக்கலாம் என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளது. அதற்கான நடவடிக்கையை அடுத்த ஆண்டு முன்னெடுக்க முடியும் என நம்புகின்றேன்.
எதிர்காலத்தில் குறுகிய காலப்பகுதியில் அதிக மழைவீழ்ச்சியும், அதனைத் தொடர்ந்து கடும் வறட்சியும் எதிர்கொள்ளப்படும் நிலை உருவாகலாம்.
இதனை எதிர்கொள்ள இப்போதே நீர்வளங்களைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம் என ஆளுநர் மேலும் தெரிவித்தார்.