;
Athirady Tamil News

ஜனாதிபதி திசாநாயக்கவின் ஆட்சி: பொருளாதாரம், ஊழல் ஒழிப்பு மற்றும் இனப்பிரச்சினை குறித்த பேராசிரியர் கீதபொன்கலனின் பார்வை

0

பொருளாதாரக் களத்தில் ஜனாதிபதி திசநாயக்க “பாராட்டத்தக்க பணியை” செய்துள்ளார். அத்துடன் ஊழல்வாதிகளான அரசியல்வாதிகளைத் தண்டிக்க நடவடிக்கை எடுத்துள்ளார். இருப்பினும், இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதில் அவர் “மிகக் குறைந்த அளவே செய்துள்ளார் அல்லது எதுவுமே செய்யவில்லை”. “போர்க்கால அக்கிரமங்களுக்குப் பொறுப்பானவர்கள் மீது குறிப்பிடத்தக்க சட்ட நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை,” என்று பேராசிரியர் கீதபொன்கலன் கூறினார்.

தவிர, தனது முக்கிய தேர்தல் பிரசார வாக்குறுதியான நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை இரத்து செய்வதை நோக்கி திசநாயக்க அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. “தனக்கு முன் இருந்த பல அரசாங்கங்களைப் போலவே, அவரின் அரசாங்கமும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையின் விரிவான அதிகாரங்களைப் புரிந்து கொண்டிருக்கலாம், மேலும் அரசியல் உறுதிப்பாட்டுக்கு இந்த அதிகாரங்கள் அவசியம் என்று நம்பலாம்,” என்றும் அவர் கூறினார்.

தி டிப்ளொமட்’ (The Diplomat) இதழின் தெற்காசிய ஆசிரியர் சுதா இராமச்சந்திரன் மேரிலாந்தில் உள்ள சாலிஸ்பரி பல்கலைக்கழகத்தின் மோதல் பகுப்பாய்வு மற்றும் தகராறு தீர்வுத் துறையின் முன்னாள் தலைவரான பேராசிரியர் எஸ். ஐ. கீதபொன்கலனுடன் நேர்காணல் ஒன்றை நடத்தி கலந்துரையாடினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.