அந்த வகையில், யாழ்ப்பாண நகர் மத்தியில் நிலவும் கடுமையான போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், பயணிகள் சேவையை நவீனப்படுத்தவும் , நகரில் இருந்து சுமார் 600 மீற்றர் தூர தொலைவில் நெடுந்தூரப் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டது.
குறித்த பேருந்து நிலையம் கட்டி முடிக்கப்பட்டு சுமார் 5 வருடங்கள் கடந்த நிலையிலும் அங்கிருந்து பேருந்து சேவைகள் இடம்பெறாத நிலையில் , யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதியின் கட்டளைக்கு அமைவாக கடந்த செவ்வாய்க்கிழமை நான்காவது தடவையாக பேருந்து சேவைகள் அங்கிருந்து ஆரம்பிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.
இலங்கை போக்குவரத்து சபையினருக்கு என தனியாக பேருந்து நிலையம் இருக்கும் போது, நாம் வேறு இடத்தில் இருந்து எமது சேவைகளை முன்னெடுக்க வேண்டிய எந்த அவசியமும் இல்லை என யாழ்ப்பாண சாலை முகாமையாளர் பிரகலாதன் தெரிவித்துள்ளார்.
அதிகாரிகளின் உறுதியான நிர்வாக முடிவுகளும், சட்டத்தின் முறையான அமலாக்கமும் தொடரும் பட்சத்தில் மட்டுமே இந்த நெடுந்தூரப் பேருந்து நிலையம் மீண்டும் மூடப்படாமல் தொடர்ச்சியாகச் செயற்பட முடியும்.